சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ ஆகிய படங்களில் காமெடி கேரக்டரில் நடித்த யோகிபாபு மூன்றாவது முறையாக அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ரவிகுமார் இயக்கவுள்ளார்

இந்த படத்தில் ஏற்கனவே கருணாகரன் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது யோகிபாபுவும் ஒப்பந்தமாகியுள்ளதால் இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் நிரவ் ஷா ஒளிப்பதிவில் முத்துராஜ் கலை இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராஜ் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சிவகார்த்திகேயன் – ரவிகுமார் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்