இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ திரைப்படத்தில் அவர் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிப்பதால் கதை சீரியஸாக இருக்கும் என்று ஊகிக்கும் நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த படத்தில் காமெடிக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ‘காவலன்’ படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தில் நடித்து வருகிரார். அதேபோல் நண்பன், துப்பாக்கி போன்ற படங்களில் விஜய்யுடன் நடித்த சத்யன் முக்கிய காமெடி கேரக்டரில் கலக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக யோகிபாபுவும் இந்த படத்தில் இணையவுள்ளார்.

இதுகுறித்து யோகிபாபு கூறியபோது, ”விஜய் நடிக்கும் ‘தளபதி 61′ படத்திற்காக தொடர்ச்சியாக 30 நாட்கள் கால்ஷீட் தேதி கேட்டுள்ளனர். ஏற்கனவே ஒருசில படங்களில் நான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். கண்டிப்பாக விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக அட்ஜெஸ்ட் செய்து தேதியை கொடுத்துவிடுவேன்’ என்று கூறியுள்ளார்.