Singer Srinivasn – நடிகை பிரியங்கா சோப்ராவின் தலைமுடி அலங்காரத்தை தமிழ் பட காமெடி நடிகர் யோகி பாபு தலையுடன் ஒப்பிட்டு பாடகர் சீனிவாஸ் கிண்டலடித்துள்ளார்.

அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டு ஹாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, அவர் அணிந்திருந்த உடை மற்றும் தலை முடி அலங்காரம் அமெரிக்காவில் சிலாகிக்கப்பட்டாலும், இந்தியாவில் அதை கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  அது என்ன தமிழ் இந்து? - நான் நிறமில்லாதாவன் - பதிலடி கொடுத்த சேரன்

பிரியங்காவின் புகைப்படத்தை பதிவிட்டு ‘ஒரு சிலர் இதை பாராட்டுகிறார்கள் என்னால் நம்ப முடியவில்லை’ என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதை ரீடிவிட் செய்த பாடகர் சீனிவாஸ் “யோகிபாபுவுக்கு போட்டி இருக்கு’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.