தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, படவாய்ப்புகள் தருவதாகக் கூறி
தன்னனைப் பயன்படுத்திக் கொண்டு சரியான வாய்ப்பு
தருவதில்லை என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு
தெலுங்கு திரையுலகினர் சிலரை கடுமையாக குற்றம்
சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து,ஸ்ரீரெட்டி தமிழில் இயக்குனர்கள்
ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் , மற்றும் சில
நடிகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டினர்.

ஸ்ரீ ரெட்டி தனது திறமையை நிரூபித்தால் அவருக்கு வாய்ப்பு
கொடுக்க தயாராக உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்து
இருந்தார்.

நடிகர் விஷால், நடிகை ஸ்ரீரெட்டி ஆதாரமில்லாமல் குற்றம்
சாட்டி வருகிறார் கூறினார். இந்த நிலையில், ஸ்ரீ ரெட்டியின்
வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாக
உருவாகவுள்ளது.

இச்சூழலில், தனது பேஸ்புக்கில் நடிகை கீர்த்தி சுரேஷை
கடுமையாக ஸ்ரீ ரெட்டி விமர்சித்துள்ளார்.

தனது பதிவில், ”என்னைப் பற்றி விஷால் பேசும்போது
கீர்த்தி ரெட்டி அசிங்கமாக என்னைப் பார்த்து சிரித்தார்.
கவலைப்படாதீர்கள் மேடம் . எப்போதும் நீங்கள் உச்சத்தில்
இருக்கமாட்டீர்கள். ஒரு நாள் நீங்களும்
போராட்டக்காரர்களின் வலியை உணருவீர்கள். உங்களது
சிரிப்பை நான் எப்போதும் மறக்க மாட்டேன். நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தற்போது மேகக்
கூட்டங்களில் பறந்து கொண்டு இருக்கிறீர்கள்” என்று
தெரிவித்துள்ளார்.