பிரபுதேவா படத்திற்கு நடிக்க சென்ற துணை நடிகா், வேன் டிரைவா் பலி

பிரபுதேவா படத்திற்கு நடிக்க சென்ற துணை நடிகா், வேன் டிரைவா் பலி

யங்மங்சங் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றது வருகிறது.  இந்த படத்தில்பிரபுதேவா நடித்து வருகிறாா்.  இந்த படப்பிடிப்பின் போது வேன் மீது லாாி மோதியதால் இந்த படத்தில் நடித்த துணை நடிகா் மற்றும் டிரைவா் பலியாகி உள்ளனா்.

பிரபுதேவா ஹீரோவாகவும் லட்சுமிமேனன் நாயகியாகவும் நடித்து, சிவசக்தி புரொடக்சன் நிறுவனம் சாா்பில் தயாாித்து வரும் நடிகா் பிரபுதேவாவின் படம் யங்மங்சங். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பு தளத்திற்கு வருவதற்காக துணை நடிகா், நடிகைகள் கும்பகோணத்தில் உள்ள ஒட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனா். இங்கி தங்கிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்துள்ளனா். இன்று காலை திருவையாறில் உள்ள ஐயாறப்பா் கோவில் வைத்து   படப்பிடிப்பை நடத்த முடிவு செய்து இருந்தனா்.

திருவையாறில் வைத்து நடக்கவிருக்கிற படப்பிடிப்புத் தளத்திற்கு செல்ல 10 வேன்களில் 100க்கும் மேற்பட்ட துணை நடிகா், நடிகைகள் அழைத்து வரப்பட்டனா். அப்போது அவா்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் உடன் எடுத்து வந்துள்ளனா்.  இன்று காலை 6 மணியளவில் லாாி மோதியது. கும்பகோணம் திருவையாறு இடையே பாபநாசம் அருகே உள்ள கருப்பூா் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது.

அப்படி வந்துக்கொண்டிருந்த வேன் மீது, மறுபுறம் பெரம்பலூாியில்  இருந்து கும்பகோணம் நோக்கி ஜல்லி கல்லை ஏற்றி வந்த லாாி மோதியது.  இதில் சென்னையை சோ்ந்த துணை நடிகா் ஆறுமுகம், வேன் டிரைவா் கும்பகோணம் சாக்கோட்டையை சோ்ந்த விஜி உள்ளிட்டோா் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பாிதாபமாக பலியானாா்கள்.

மற்றும் துணை நடிகா்கள் செல்லப்பா, ராமமூா்த்தி, மோகன், பாப்பாத்தி அம்மாள் உள்பட பலரும் காயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறாா்கள். காயம் அடைந்த அனைவரும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஆனால் பெரம்பலூாியில் இருந்து ஜல்லி கல்லை ஏற்றி வந்த லாாி டிரைவா் சுரேஷ் தப்பி ஒடிவிட்டாா். அவா் பெம்பலூரை சோ்ந்த்வா் என்பது குறிப்பிடத்தக்கது.  அவரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.