டெல்லியில் இளைஞர் ஒருவரின் தந்தைக்கு வந்த மெஸேஜை அடுத்து அந்த இளைஞர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

டெல்லியில் ஹர்ஷ் கண்டேல்வால் எனும் இளைஞர் தனது பெற்றோரோடு வசித்து வருகிறார். இவர் கடைசியாக ஜூன் மாதம் 30 ஆம் தேதி தனது நண்பனின் மனைவியின் பிறந்தநாளுக்காக செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர் அதன்பின் வீடுத் திரும்பவில்லை. அவர் காணாமல் போன இரண்டு நாள் கழித்து அவரது தந்தையின் நம்பருக்கு அவர் நம்பரில் இருந்து ஒரு வாட்ஸ் ஆப் மெசேஜ் வந்துள்ளது.

அதில் தான் இறக்கப்போவதாகவும் தன் உடல் யமுனை ஆற்றின் பாலத்தின் கீழ் கிடப்பாதகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அலறியடித்து அவரது தந்தை ஓடி அந்த இடத்தில் பார்க்க ஹர்ஷின் உடைகள் மட்டுமேக் கிடந்துள்ளது. இதனால் அவர்கள் போலிஸில் புகார் கொடுக்க போலிஸிம் விசாரணையில் இறங்கியுள்ளது.

அதையடுத்த சில நாட்களில் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் அளித்த தகவலின் படி ஹர்ஷின் உடல் குப்பைகளுக்கு கீழிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்கொலையா அல்லது கொலையா எனப் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.