திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து 19 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் வலங்கைமான் அருகேயுள்ள சின்னகரம் பகுதியுஇல் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் மகள் மகேஸ்வரி (19). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் தமிழரசன்(22) என்பவரும் படித்து வந்தார். ஒரே கல்லூரி என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாகவும் மாறியது.

அப்போது, திருமணம் செய்து கொள்வதாய் வாக்குறுத்தி அளித்த தமிழரசன், மகேஸ்வரியுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். ஆனால், அதன்பின் மகேஸ்வரியை சந்திப்பதை தமிழரசன் தவிர்த்து வந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி மகேஸ்வரி கேட்ட போது, சரியான பதிலை கூறாமல் தட்டிக்கழித்து வந்துள்ளார்.

கடந்த இரு வருடங்களாக இதே நிலை தொடர்வதால், மகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே, போலீசார் தமிழரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.