Sucide at Thane station – மும்பையில் தானே ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் திடீரென ரயிலின் மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 18ம் தேதி மும்பை தானே ரயில்வே நிலையத்தில் பொதுமக்கள் அதிகமாக காத்திருந்தனர். அப்போது ஒரு தண்டவாளத்தில் ஒரு ரயில் வந்தது. அப்போது திடீரென ஒரு வாலிபர் ரயில் முன்பு பாய்ந்தார். விசாரணையில் அவர் பெயர் ஆகாஷ் ஹோல்கர் என்பதும், பிளாட்பார்மில் தனது தந்தையுடன் நின்றிருந்த அவர் திடீரென ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

ரயில் சக்கரத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார். இதைக்கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

Courtesy to Times of India