திருவாரூரில் 8 மாதத்திற்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய இளம்தலைமுறையினர் பலருக்கு பொறுமை என்பது இருப்பதே கிடையாது. எதையுமே உடனடியாக அடைந்துவிட வேண்டுமென்ற எண்ணம். கஷ்டப்பட்டு வளர்க்கும் தாய் தந்தையரை மதிக்காமல் சிறுவயதிலேயே காதல், கல்யாணம் என பெற்றோரின் கனவுகளை சிதைக்கின்றனர். சரி அப்படி பெற்றோர்களை மீறி திருமணம் செய்துகொள்கிறார்களே, நன்றாக வாழ்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.

திருவாரூர் பதஞ்சலி மனோகரன் தெருவை சேர்ந்த முரளிதரன் (25) அதே பகுதியை சேர்ந்த சிவஞானராணி (21) என்ற இளம்பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாட்கள் செல்ல செல்ல அவர்களின் திருமண வாழ்க்கை கசந்தது. இருவருக்கும் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த முரளிதரன் வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது காதல் மனைவி செய்வதறியாது நிற்கதியாய் தவிக்கிறார். அவர் தற்பொழுது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.