அரசு நடத்தும் மதுபான கடைக்கு எதிராக பதாகை வைத்தவரை கைது செய்த போலீசாரை நீதிமன்றம் கண்டித்துள்ளது.

திருவாரூர் அருகே தேவர்கண்ட நல்லூர் எனும் இடத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதை கண்டித்து செல்லபாண்டியன் என்ற வாலிபர் ஒருவர் பதாகை வைத்திருந்தார். எனவே, அவரை போலீசார் அவரை கைது செய்து நன்னிலம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி வாலிபர் பதாகை வைத்ததில் என்ன தவறு? என காவல் துறையிடம் கேள்வி எழுப்பினர். அதன்பின் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி வாலிபரை சொந்த ஜாமினில் விடுதலை செய்தார்.