இந்தியாவின் முதல் ஸ்பேஸ் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி இந்த படத்தின் தீம் பாடல் ஒன்று வெளீயாகவுள்ளது

டி.இமான் இசையமைப்பில் உருவாகும் இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா பாடவுள்ளார். இருவரும் இணையும் முதல் பாடல் என்பதால் இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பிரபல பாப் பாடகர் யோகி பி மற்றும் சுனிதா சாரதி ஆகியோர் பாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.