தனுஷ் நடிக்க மாரி 2′ படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ரசிகர்களின் விருப்பத்தை புறக்கணித்த தனுஷ், ‘மாரி 2’ படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த தகவல் நேற்று அதிகாரபூர்வமாக வெளிவந்தது

இதையும் படிங்க பாஸ்-  சொகுசு வாகனத்திற்கு மின்சாரம் திருட்டு : தனுஷ் தரப்புக்கு அபராதம் விதிப்பு

இதனால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே ‘விஐபி 2’ படத்தில் அனிருத் இல்லாதது பெரிய குறையாக கருதப்பட்டதால், ‘மாரி 2’ படத்திற்காகவது அனிருத் இசையமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், இந்த படமும் ‘விஐபி 2’ போலவே தோல்வி அடையும் என சமூக வலைத்தளங்களில் சாபமிட்டு வருகின்றனர்.