ஒரு காலத்தில் அதிக பாடல்கள் கொண்ட படமெல்லாம் வந்தது பாடல்களுக்காக படங்கள் ஓடியது ஒரு காலம். இப்போது வரும் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் அதிகம் இருப்பதில்லை அதிக பட்சம் 5,6 பாடல்கள் குறைந்தவை 3,2 இந்த அடிப்படையில்தான் தமிழ் சினிமாவின் பாடல்கள் வருகின்றன.

இதையும் படிங்க பாஸ்-  வைரமுத்து,பாரதிராஜா,இளையராஜா கூட்டணியை யாரும் எதிர்பார்க்கவில்லை-பாரதிராஜா

ஆனால் யுவன் இசையில் எலன் என்பவர் டைரக்டு செய்து ஹரிஸ் கல்யாண், ரைசா நடித்துள்ள ப்யார் ப்ரேம காதல் படத்தில் மொத்தம் 12 பாடல்கள் வருகிறது பல வருடங்கள் கழித்து இப்படியான அதிகப்படியான பாடல்கள் கொண்ட இசை ஆல்பம் வெளிவருகிறது. ஏற்கனவே ஒரு சில பாடல்கள் வெளியிடப்பட்டாலும் இன்று எல்லா பாடலும் கொண்ட இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.