இந்தியாவின் நட்சத்திர நாயகனான யுவ்ராஜ் சிங் சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான யுவ்ராஜ் சர்வதேசப்போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் இருப்பதாகவும் அதுதொடர்பாக பிசிசிஐ-டம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஆகியத் தொடர்களை இந்தியா வெல்ல முக்கியக்காரணமாக விளங்கியவர் யுவ்ராஜ் சிங்.

இதையும் படிங்க பாஸ்-  ஏழாவது முறையும் வெற்றி - சாதனையைத் தக்க வைத்த கோஹ்லி & கோ !

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் போராடி வந்த பிசிசிஐ ஒப்புதலுடன் வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகள் மற்றும் கவுண்ட்டி போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனாலேயே இப்போது தனது ஓய்வு முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க பாஸ்-  போலி கணினிகள் பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம்! அதிர்ச்சியூட்டும் தகவல்

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய யுவ்ராஜ் சிங் முதல் 4 ஆட்டங்களில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து. தற்போது 37 வயதாகும் யுவ்ராஜ் சிங் இனி இந்திய அணியில் இடம்பிடிப்பது முடியாத காரணம் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.