பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைஃப், ஷாருக்கான் நடிக்கும் ஜீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரை பற்றி சினிமா செய்திகள் வருகிறதோ இல்லையோ ஆனால் காதல் கிசுகிசுக்கள் தான் அதிகம் வருகின்றன. தற்போது கத்ரீனா கைஃப் மொடா குடிகாரியாக உள்ள தகவல் வந்துள்ளது. இவா் தனது தங்கை இசபெல் கைஃபை எப்படியாவது ஹீரோயினாக்கும் முயற்சியல் ஈடுபட்டு சல்மான் கானின் உதவியை நாடினார். ஆனால் அவரது சகோதரி மீடியாவை சந்தித்து அந்த பெரிய ரணகளமாகி விட்டதால், அதை அறிந்த சல்மான் இசபெல்லை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க விரும்பவில்லையாம்.

ஆன்ந்த எல்.ராய் இயக்கத்தில் ஷாருக்கான், கத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ஜீரோ. இதில் குள்ள மனிதராக ஷாருக்கான் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே நாம் அறிந்ததே. இந்நிலையில் கத்ரீனாவின் கேரக்டா் தற்போது வெளியாகியுள்ளது. ஜீரோ படத்தில் கத்ரீனா கைஃப் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவராக நடித்து வருகிறாராம். இந்த குடிப்பழக்கத்தினால் வாழ்க்கையில் என்ன கஷ்டங்களை அனுபவிக்கும் பெண்ணாக நடிக்கிறாராம். அதுபோல அனுஷ்கா வர்மா வாழ்க்கையில் முன்னேற போராடும் விஞ்ஞானியாக நடிக்கிறாராம். இது ரசிகா்களுடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ஜீரோ படம். இந்த படமானது டிசம்பர் மாதம் 21ம் தேதி திரையில் விருந்து படைக்க உள்ளது.